ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க வீராங்கனையான கேட்டி லெடெக்கி, நீச்சல் பிரிவில் ஆண்களுக்கு சவால் அளிக்கும் வகையில் அட்டகாசமாக தனது திறமையை வெளிப்படுத்தி தங்கம் வென்றுள்ளார். 

அவர் ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறை நடந்த 1500 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை எனும் வரலாற்றை அவர் பதிவு செய்துள்ளார். 

கேட்டி லெடெக்கி பந்தயத் தூரத்தை 37.39 செக்கன்களில் நீந்தினார்.

வெள்ளிப் பதக்கம் வென்ற ஜப்பானிய - அமெரிக்க நீச்சல் வீரர் சல்லிவன் 41.41 செக்கன்களிலும், வெண்கலம் பதக்கம் வென்ற ஜேர்மனியின் சாரா கோஹ்லர் 42.91 செக்கன்களிலும் நீந்திக் கடந்தனர். 

ஒலிம்பிக்கில் வரலாற்று ரீதியான சாதனை படைத்த பின் கேட்டி லெடெக்கி நீச்சல்தடாகத்தில் மகிழ்ச்சியில் கண்ணீர் மல்கினார்.

ஒலிம்பிக் வரலாற்றில் பெண்களுக்கு என 1,500 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.