முன்னாள் இராணுவ பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்கவின் வெளிநாடு செல்வதற்கான கோரிக்கையை கோட்டை நீதிமன்றம் இன்று (06) நிராகரித்துள்ளது.

டி.கே.பி. தசநாயக்க ஒன்றரை வருடத்திற்கு வெளிநாடு செல்வதற்கான கோரிக்கையை நீதிமன்றத்தில் கோரியிருந்த நிலையில், குறித்த கோரிக்கையை கோட்டை நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன நிராகரித்துள்ளார்.

கடந்த 2008 ஆண்டு  நபர்கள் கடத்தப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேக நபராக இவர் பெயரிடப்பட்டுள்ளதோடு, கடவுச்சீட்டும் நிதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.