சீனாவிடமிருந்து மேலும் 4 மில்லியன் சினாபோர்ம் தடுப்பூசிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொள்வனவு செய்யப்படும் என்று சீனாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஒரே தடவையில் கொள்வனவு செய்யும் ஆகக் கூடிய தடுப்பூசிகளின் அளவுகள் இதுவாகும்.

பீஜங்கில் உள்ள இலங்கை தூதரகம் தற்சமயம் 2021 ஆகஸ்ட் 04-08 ஆம் திகதிகளுக்கு இடையில் இந்த அளவுகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த நான்கு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் உள்ளடங்களாக இலங்கை சீனாவிடமிருந்து 12 மில்லியன் சினாபோர்ம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது.