குமா­ர்­சு­குணா

டய­க­ம பிர­தே­சத்தைச் சேர்ந்த சிறுமி அமைச்சர் ரிஷாத்தின் வீட்டில் வைத்­து தீ காயங்­க­ளுக்கு உள்­ளான நிலையில்  மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்பட்டு சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்தார்.  

அவ­ரது பிரேத பரி­சோ­தனை அறிக்­கையில் பல­முறை பாலியல் துஷ்பிர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­க­பட்­டமை தெரி­ய­வந்­ததை அடுத்து இந்த விடயம் முழு நாட்­டிலும் பாரிய அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­து.

உண்­மை­யில் சிறு­வர்­களை வேலைக்கு அனுப்பும் செயல் கண்­டிக்­கத்­தக்­கது. ஆனால் குடும்ப வறு­மையை காரணம் காட்டி கல்வி கற்க வேண்­டிய சிறு­வர்­களை வேலைக்கு அனுப்பும் செயல் மலை­ய­கத்தில் தொடர்ந்து நடை­பெற்று வரு­கின்­றது. 

கல்வி அறிவு குறைந்த பெற்­­றோர்கள் இதுபோன்ற நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­கின்­றனர்.  இது அவர்­க­ளது அறி­யா­மை­யாக இருக்­கலாம். ஆனால் கல்வி அறி­வு­ள்ள ஒரு சமூக அந்­தஸ்த்து உள்ள மக்­களின் பிர­தி­யான பாரா­ளு­ம­ன்ற உறுப்­பினர் தனது வீட்டில் சிறு­­மியை வேலைக்கு அமர்த்­தி­யது குற்றம். 

இது தொடர்­பான விசா­ர­ணைகள் தொடர்ந்து நடை­பெற்று வரு­கி­ன்ற நிலை­யில், இதனை  சமூகங்க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சி­னை­க­ளாக  சிலர் தூண்டி விடு­­வ­தனை பார்க்­கின்றோம். ஷ

குறிப்­பாக சமூ­கவ­லைத்­த­ளங்­க­ளில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கு ஆத­ர­வா­கவும் சிறு­மிக்கு எதி­ரான மன நிலை­யி­லும் பல பதி­வுகள் கார­சார விவா­தங்கள் நடை­பெ­று­கின்­றன.

இந்த இடத்தில் நாம் ஒரு விட­ய­த்தை உணர வேண்­டும்.

கடவுள் என்­பவர் அன்பின் வடி­வா­னவர். எல்லா மதங்­களும்  இத­னைதான் போதிக்­கின்­றன. இந்து சம­ய­மாக இருந்­தாலும் இஸ்­லா­மிய மத­மாக இருந்தாலும் கிறிஸ்­த­வ­மாக  இருந்­தாலும். நாம் எந்த மார்­க்கத்தை கடைப்­பி­டித்­தாலும்  கடவுள்  என்­பவர் அன்­பா­னவர். எல்லா மதங்­க­ளிலும் அன்பே இறைவன் என்­றுதான் போதிக்­கப்­படும். 

மனித­னை வழி­ந­டத்­தக்­கூ­டிய மிக நல்ல விழு­மி­யங்­கள்தான்  மதங்களில் போதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆனால்,  துர­திஷ்ட வச­மாக மதங்கள் மீது சில­ருக்கு பிடிக்கும் மதம்.. அதனால் நடத்­தப்­படும் தவ­றான வழி­காட்­டல்கள்  குறித்த சமூ­கங்­க­ளையே  சீர­ழித்து விடு­கின்­றது. 

நாம் பயப்­பட வேண்­டி­யது இறைவன் ஒருவ­ருக்­கே. நம்மை நேசிக்கும் அளவு பிற­ரையும் நேசிக்க வேண்டும் என்­பதே இறை­வனின் கோரிக்கை. அவன் படைத்த பூமி.. அவன் படைத்த உயிர்கள்.. . எல்லாம் அவ­னு­டை­ய­துதான். 

இதில் நாம் சிறு தூசிக்கு கூட சம­னற்­ற­வர்கள். இந்த பூமி­யை விட்டு நம் உயிர் பிரிந்த பின்னே நடப்­பது என்ன என்று கூட நாம் அறியோம். ஒரு சிறிய காலம் மட்­டுமே இந்த மண்ணில் தங்­கி­விட்டு செல்­ல­போ­கின்றோம். இந்த காலத்­துக்குள் எதற்கு வன்மம். வன்மத்­த­ன­மான பேச்­சுக்கள். வக்­கி­ரத்­த­ன­மான நட­வ­டிக்­கைகள்.

இது கலி­காலம் அன்பு மடிந்து பாவங்கள் அதி­க­ரித்­துள்ள கால­கட்டம். ஆயினும் நாம் அன்பை செலுத்த வேண்­டி­யது எமது கடமை அல்­லவா? ஆறு­கால பூசை செய்­வ­தாலோ பல­முறை ஒரு நாளில்  பிரார்த்­திப்­ப­தாலோ கிடைக்­காத பலன் அன்பை மற்­ற­வர்­க­ளுக்கு செலுத்தும் போது கிடைக்கும். 

இந்த அன்பு நிபந்­த­னை­யற்­ற­தாக எல்­லோ­ருக்கும் சம­ம­மாக செலுத்த வேண்டும். அதுவே இறை­வனை மகிழ்­விக்­கும். ஆனால் நாம் தரா­தரம் பார்த்து பழ­கு­கின்றோம். ஏழை–­ப­ணக்காரர் என்று பேதம் கொண்டு நடத்­துகின்றோம். 

வறி­ய­வர்கள் இல்­லா­த­வர்கள் எல்­லோருமே நமது உடன்­பி­றப்­புகள் என உணர்­வ­திலை. நாம் மட்டும் ஆயிரம் வரு­டங்கள் இந்த பூமியில் வாழ்­வது போல ஒரு  எண்ணம். ஆனால் அது பொய் என்­ப­துதான் உண்மை.  

பெரி­ய­வர்­களை மதிப்­ப­தில்லை. வீட்டில் பிள்­ளை­களால் கைவி­டப்­பட்­டு வீதி­களில் அநா­தை­க­ளாக இருக்கும் பல பெற்­றோரை பார்க்­கின்றோம். அது­போல  தமது பிள்­ளைகள் சிறப்­பாக இருக்க வேண்டும் என நினைக்­கின்ற பெற்றோர் ஏனைய பிள்­­ளை­களை அச்­சு­றுத்துவது வேலைக்­கார்­க­ளாக பாவிப்­பது எல்லாம் எத்­தனை கொடு­மை­யான விடயம் என உணர வேண்டும்.

நமக்கு கட­வுள் அனைத்­தையும் தருவார். அதனை நாம் தவ­றாக பயன்­ப­டுத்­தக்­கூ­டாது. நமது தேவைக்கு எடுத்­துக்­கொண்டு மற்­றதை இல்­லாத மக்­க­ளுக்கு  கொடுக்கவேண்டும். ஆனால் நமக்­கென்று ஒரு குடும்பம் மட்­டுமே இந்த உலகம் என்று நினைத்து அவர்­க­ளுக்காக மட்­டுமே வாழ நினைக்­கின்­றோம்.

இதுபோன்ற சுயநல போக்கே...பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் வீட்டில் சிறு­­மிக்கு நடந்த கொடு­மைக்கு காரணம். அதிகா­ரத்தில் இருந்­தாலும் பண பலத்­தோடு இருந்­தாலும் இறைவன் அதை விட பெரி­யவர் என்­பதை அனை­வரும் உணர வேண்டும்.

நாம் நாலு பேரிடம் நல்­ல­வர்கள் போல நடித்­துக்­கொண்டு பல­ருக்கு செய்­விக்கும் தீமை­கள், ­ந­மக்கே வினை­யா­கி­விடும். 

இறைவன் அனைத்­தையும் கவ­னித்­துக்­கொண்­­டுதான் இருப்பான். அவ­னு­டைய நீதி­மன்­றத்தில் ஏழை பணக்­காரர் என்ற பேதம் இருக்­காது. தவறு செய்­ப­வர்கள் எத்­தனை பெரி­ய­வர்­க­ளாக இருந்­தாலும் தண்­ட­ணையில் இருந்து தப்ப முடி­யாது. 

எனவே அன்பை விதைத்து இந்த பூ­மியில் வாழும் வரை இறை­வ­னக்கு பயந்து சிறந்த நல்ல மனி­த­னாக வாழ முயற்­சி­யுங்கள். அனைத்தும் ஒரே இறை­வன்தான். மதங்­களை கடந்து மனி­தர்­களை நேசி­யுங்கள். தர்மம் வெல்­லட்­டும். வெல்­லும்..