ஜேர்மனியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இரசாயன தளமொன்றில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த அனர்த்தத்தில் ஐந்து பேர் காணாமல்போயுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் இரசாயனத் தளத்தின் நடத்துனர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். 

வெடி விபத்தினால் குறித்த பகுதியை அண்மித்த குடியிருப்பாளர்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, பல மணிநேரங்களின் பின்னர் நீக்கப்பட்டது.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 09:40 மணியளவில் (07:40 GMT) லெவர்குசென் நகரில் உள்ள செம்பார்க் வளாகத்தை உலுக்கிய வெடிப்பில் குறைந்தது 31 பேர் காயமடைந்தனர், அவர்களில் ஒருவர் படுகாயமடைந்தார் என்று இரசாயனத் தள நடத்துனர் கரென்டா கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அந்த இடத்தில் புரிந்தவர்கள் ஆவர்.

மாலையில் புதுப்பிக்கப்பட்ட சேத எண்ணிக்கையில், மீட்புக் குழுவினரால் உயிரிழந்த இரண்டாவது நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், காணாமல் போன ஊழியர்களின் எண்ணிக்கை மூன்று முதல் ஐந்து வரை உயர்வடைந்துள்ளதாகவும் கரென்டா கூறினார்.

பல கிலோமீட்டர் தொலைவில் தென்படும் கறுப்பு புகை ஒரு நெடுவரிசையை வான் நோக்கி நகர்ந்தது. வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.