உத்தரப் பிரதேசத்தின் பராபங்கியில் வேகமாக பயணித்த லொறியொன்று பஸ் மீதி மோதி இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

18 killed, several injured after speeding truck hits bus in UP's Barabanki

பராபங்கியில் உள்ள ராம் சனேஹி பொலிஸ் நிலையம் அருகே அயோத்தி-லக்னோ நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பஸ்ஸில் 140 பேர் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் ஹரியானாவின் பல்வாலில் இருந்து பீகார் வரை பயணித்த தொழிலாளர்கள் ஆவர்.

சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்ததுடன், விபத்தில் சிக்கியவர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

Image

காயமடைந்த பயணிகள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.