ஒரு பசு அடங்கலாக இறைச்சிக்காக எடுத்துச்செல்லப்பட்ட 9 மாடுகளுடன் ஒருவர் பளை பொலிசாரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிளிநொச்சியிலிருந்து கூலர் வாகனம் ஒன்றில் இறைச்சிக்காக மாடுகள் கொண்டு செல்லப்படுவது தொடர்பில் பளை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து, பளை நகரில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ஒரு பசு மாடு அடங்கலாக 9 மாடுகள் அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட நிலையில் கால்நடைகள் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு இறைச்சிக்காக மாடுகளை அனுமதிப்பத்திரமின்றி ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரைணை மேற்கொண்டு வரும் பளை பொலிசார், குறிதத் விடயம் தொடர்பில் நாளை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.