(எம்.மனோசித்ரா)
உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலகல் (sapphire) ஒன்று கிணறு தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இரத்தினபுரி பகுதியில் உள்ள தனது வீட்டில் கிணறு தோண்டிய தொழிலாளர்களால் இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில், சுமார்  100 மில்லியன் டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 நீலகல் சுமார் 510 கிலோகிராம் அல்லது 2.5 மில்லியன் கரட்ஸ் எடையைக் கொண்டுள்ளது மற்றும் அதற்கு "Serendipity Sapphire”என்று பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.