சுதந்திர கட்சியை சேர்ந்த ஒரு சிலரின் முரண்பாடான கருத்துக்களாலேயே பிரச்சினை ஏற்படுகிறது: திலும் அமுனுகம

By J.G.Stephan

27 Jul, 2021 | 04:25 PM
image

(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து செயற்படவே எதிர்பார்த்துள்ளோம். சுதந்திர கட்சியின் ஒருசில உறுப்பினர்கள்  முரண்பாடான கருத்துக்களை குறிப்பிடும் போது பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன என  போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின்  பொதுஜன பெரமுனபிரதான கட்சியாக உள்ளது. பொதுஜன பெரமுனவை அடிப்படையாகக் கொண்டு  ஏனைய கட்சிகள் கூட்டணியில் பங்காளி கட்சிகளாக ஒன்றிணைந்துள்ளன. என்பதை மறுக்க முடியாது.

 ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு சில உறுப்பினர்களின் கருத்துக்கள் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் அமைந்தது. இவர்களின் கருத்துகளுக்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்ற ரீதியில் பதிலளிக்கும் போது பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன. ஆகவே சுதந்திர கட்சியின் ஒரு சில உறுப்பினர்களின் கருத்துக்கள் குறித்து சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.

மேலும், பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் அனைத்து பங்காளி கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசியலில் தொடர்ந்து செயற்பட எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right