பாரிய கையகப்படுத்தல் திட்டம் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள், 40,000 கோடி ரூபாய் செலவில் கடற்படைக்கு ஆறு மரபுவழி நீர்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டில் கட்டுவதற்கான முன்மொழிவுக்கான வேண்டுகோள் (RFP) அல்லது முறையான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இந்தியாவில் உயர்நிலை இராணுவ தளங்களை உருவாக்க உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒத்துழைக்க அனுமதிக்கும் மூலோபாய கூட்டு (SP) மாதிரியின் கீழ் செயல்படுத்தப்படும் முதல் திட்டமாக இது அமையும்.

Mazagaon Dock Shipbuilders Limited (MDL) மற்றும் Larsen & Toubro (L&T) ஆகியவற்றுக்கு RFP வழங்கப்பட்டது. இந்த இரு இந்திய நிறுவனங்களும் நீண்டகாலமாக வரையப்பட்ட செயல்முறையைத் தொடர்ந்து பட்டியலிடப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

L&T மற்றும் MDL ஆகிய இரண்டும் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள ஐந்து வெளிநாட்டு கப்பல் கட்டுந்துறைகளான - Daewoo Shipbuilding (South Korea), ThyssenKrupp Marine Systems (Germany), Navantia (Spain) மற்றும் Naval Group (France) மற்றும் JSC ROE(Russia) ஆகியவற்றில் ஒன்றுடன் இணைந்து செயற்பட வேண்டியிருக்கும்.

திட்டம் 75(I) என்ற பெயரில் கையகப்படுத்தும் திட்டத்திற்கான முன்மொழிவுக்கான கோரிக்கையை (RFP) வழங்க Defence Acquisition Council (DAC) கடந்த மாதம் அனுமதி அளித்தது. 

“இந்த திட்டம் முக்கிய நீர்மூழ்கிக் கப்பல், கப்பல் கட்டும் தொழிற்துறையை உயர்த்துவதில் உதவுவது மட்டுமல்லாமல், உற்பத்தி / தொழில்துறை துறையை பெரிதும் மேம்படுத்துகிறது” என அமைச்சு  தெரிவித்துள்ளது.

இந்த நோக்கங்களை அடைவதற்கு, RFP ஆனது தளங்களின் உள்நாட்டு உற்பத்தியின் கட்டாய நிலை, வடிவமைப்புக்கான ToT, நீர்மூழ்கிகளுக்கான உற்பத்தி மற்றும் பராமரிப்பு, ஒரு சில முக்கியமான உபகரணங்கள் மற்றும் அமைப்புகள் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

மூலோபாய பங்குடமை மாதிரியின் கீழ், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் இறக்குமதி சார்புநிலையை குறைக்க உயர் மட்ட இராணுவ தளங்களை உருவாக்க முன்னணி வெளிநாட்டு பாதுகாப்பு மேஜர்களுடன் கைகோர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

2030 இல் நிறைவடையும் 30 ஆண்டு திட்டத்தின் கீழ் அதன் நீரடி போர்த் திறனை அதிகரிப்பதற்காக ஆறு அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட 24 புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை கொள்வனவு செய்ய இந்திய கடற்படை திட்டமிட்டது.

இது தற்போது 15 வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களையும் இரண்டு அணு நீர்மூழ்கிக் கப்பல்களையும் கொண்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது இராணுவ இருப்பை அதிகரிப்பதற்கான சீனாவின் வளர்ந்து வரும் முயற்சிகளைக் கருத்திற்கொண்டு கடற்படை அதன் ஒட்டுமொத்த திறன்களை கணிசமாக உயர்த்துவதில் கவனம் செலுத்துகிறது.

உலகளாவிய கடற்படை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, சீன கடற்படையில் தற்போது 50 க்கும் மேற்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களும் சுமார் 350 கப்பல்களும் உள்ளன. அடுத்த 8-10 ஆண்டுகளில் மொத்த கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையானது 57 carrier-borne போர் விமானங்கள், 111 கடற்படை பயன்பாட்டு ஹெலிகொப்டர்கள் (NUH) மற்றும் 123 multi-role ஹெலிகொப்டர்களை மூலோபாய பங்குடமை மாதிரியின் கீழ் வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

நன்றி - இந்தியா டுடே

தமிழில் எம் . நேசமணி