வடக்கு, கிழக்கிற்கு 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் - அமைச்சர் டக்ளஸிடம் கையளிப்பு

Published By: Digital Desk 4

27 Jul, 2021 | 05:13 PM
image

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில்  இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங் தடுப்பூசிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.

வடக்கு கிழக்கினை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கும் நோக்கோடு  சுமார் 16 இலட்சம் தடுப்பூசிகளை சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதுவரினால்  ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்தத் தடுப்பூசிகள் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அட்டனில் ரூ.2.89 இலட்சம் மதிப்புள்ள தங்க...

2026-01-25 15:11:41
news-image

இலக்கந்தை பகுதியில் புதையல் தேடல்: நால்வர்...

2026-01-25 14:38:29
news-image

புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ...

2026-01-25 15:05:26
news-image

கண்டியில் யாசகம் பெறும் பெண் ஒருவர்...

2026-01-25 14:32:05
news-image

எல்லை நிர்ணய குழு மீள் நியமனம்...

2026-01-25 14:30:40
news-image

அரசாங்கம் ஆட்சியைத் தக்கவைக்க கலாசாரம் மற்றும்...

2026-01-25 14:20:31
news-image

அம்பலாங்கொடையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-01-25 13:05:29
news-image

மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி...

2026-01-25 13:50:34
news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-01-25 13:08:42
news-image

சஜித் பிரேமதாச மற்றும் ஐ.தே.க மூத்த...

2026-01-25 12:26:18
news-image

குளிரிலும் களைகட்டும் நுவரெலியா: குவியும் சுற்றுலாப்...

2026-01-25 12:32:31
news-image

யாழ். பாடசாலையொன்றில் சிவலிங்கத்தை அகற்றியதற்கு எதிராக...

2026-01-25 12:03:42