முல்லைத்தீவு அனிஞ்சியன்குளம் மல்லாவி பகுதியில் கிணற்றிலிருந்து கணவன் மனைவி ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே இடத்தை சேர்ந்த 31 வயதுடைய ரஞ்சன் பிரதீபன் மற்றும் அவரது மனைவியான 27 வயதுடைய பிரதீபன் மாலினி ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குறித்த இருவரும், பிரதேச வெதுப்பகம் ஒன்றில் கடமையாற்றியபோது திருமணம் செய்துள்ளதாகவும்,  குறித்த இருவருக்கும் திருமணமாகி 10 மாதங்கள் கடந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.