தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 48 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Published By: Digital Desk 2

27 Jul, 2021 | 02:21 PM
image

எம்.மனோசித்ரா

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 123 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 52 277 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இதுவரையில் 48 000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 4000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

அவர்களுக்கு பொலிஸாரால் அறிவிக்கப்படும் போது நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

இவை தவிர மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் வாகனங்கள் பிரவேசிக்கின்ற 13 இடங்களில் 3196 வாகனங்களில் பயணித்த 7731 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதன் போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அல்லது மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 100 வாகனங்களில் பயணித்த 232 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலுள்ளதால் சகலருக்கும் ஒரு மாகாணத்திலிருந்து பிரிதொரு மாகாணத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது. எனினும் நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது அவசர தேவைக்காக உரிய ஆவணங்களுடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமலும் , முகக் கவசத்தை முறையாக அணியாமலும் பலர் நடமாடுகின்றமை தொடர்பில் விசேட கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன  என்றும்  பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷிரந்தி ராஜபக்‌ஷ  நாட்டை விட்டு தப்பிச்...

2026-09-16 17:44:55
news-image

புகையிரத பொது முகாமையாளரை பதவி விலகக்...

2026-09-16 23:26:17
news-image

புதிய சீனத் தூதுவர் வீ ஹுவாஷியாங்...

2026-09-16 22:09:21
news-image

ராஜபக்‌ஷ குடும்பத்தை இம்ரான் கான் அல்லது...

2026-09-16 16:49:17
news-image

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு நெருக்கடி: மருந்து...

2026-09-16 16:22:25
news-image

இலங்கையை பிராந்திய நிதித் தொழில்நுட்ப மையமாக...

2026-09-16 16:46:15
news-image

மட்டக்குளி பகுதியில் கோர விபத்து –...

2026-09-16 22:07:10
news-image

மாணவர் குறைவான கிராமப்புற பாடசாலைகளை மூட...

2026-09-16 16:48:05
news-image

“சிரிலிய சவிய” நிதி மோசடி வழக்கு...

2026-09-16 19:27:20
news-image

தமிழ் பேசும் சமூகங்கள் நாட்டின் அரசியலை...

2026-09-16 20:29:10
news-image

நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கல்: செயற்கை...

2026-09-16 14:02:12
news-image

மன்னார் வைத்தியசாலையில் இந்திய நிதியுதவியுடன் அவசர...

2026-09-16 19:10:32