லூபஸ் என்ற நோயாலும் கிட்னி பாதிக்கப்­ப­டலாம்

Published By: Robert

06 Sep, 2016 | 10:34 AM
image

“சிறு­நீ­ரக கல், உயர் குருதி அழுத்தம், சிறு­நீ­ரகத் தொற்று மற்றும் சர்க்­கரை நோயால் சிறு­நீ­ர­கங்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றன. இதற்­காக மேற்கொள்­ளப்­படும் சிறுநீர் பரி­சோ­தனை மற்றும் இரத்த பரி­சோ­த­னையின் போது தான் இதன் பாதிப்பு தெரி­ய­வரும். தொடக்க நிலை பாதிப்பு குறித்த அறி­கு­றிகள் எதுவும் தெரி­யாது. பாதிப்பு அதி­க­ரித்­த­வுடன் தான்

அறி­கு­றிகள் தோன்றும். கால்கள் வீக்கம், பட­ப­டப்பு ஆகிய அறி­கு­றிகள் தோன்­றி­னாலும் கிட்­னியில் பாதிப்பு ஏற்­பட்­டி­ருப்­ப­தற்­கான அறி­கு­றி­யாக எடுத்துக் கொண்டு மருத்­துவ ஆலோ­சனை பெற­வேண்டும். கிட்னி பாதிப்பு யாருக்கு வேண்­டு­மா­னாலும் வரலாம். சிறு குழந்தை முதல் வய­தான பெரி­ய­வர்கள் வரை வரக்­கூடும்’‘ என்று சிறு­நீ­ர­கத்தின் பாதிப்பு குறித்து எச்­ச­ரிக்­கை­யுடன் எம்­மிடம் பேசத் தொடங்­கு­கிறார் டொக்டர். T.V. விக்ரம் சாகர். இவர் இங்­கி­லாந்து நாட்டில் பயிற்சி பெற்று, மது­ரையில் இயங்கி வரும் வேலம்மாள் மருத்­துவ கல்­லூரி மற்றும் மருத்­துவமனையில் தற்­போது சிறு­நீ­ர­க­வியல் துறையில் அனு­ப­வ­மிக்க மருத்­து­வ­ராக பணி­யாற்றி வரு­கிறார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அக்யூட் கிட்னி இன்­ஜுரி என்றால் என்ன? அதற்­கான சிகிச்சை குறித்து..?

இதற்கு முன் சிறு­நீ­ரக பாதிப்பு ஏதும் இல்­லாம லிருக்கும் போது, திடீ­ரென்று உடலில் ஏற்­படும் கட்­டுப்ப டுத்த இய­லாத வாந்தி மற்றும் பேதியின் கார­ண­மாகக் கூட கிட்னி பாதிக்­கப்­ப­டலாம். சிறு­நீ­ரகத் தொற்று இருந்தால் கூட இவை உரு­வா­கக்­கூடும். சில தரு­ணங்­களில் சில­ருக்கு சில கார­ணங்­களால் சாப் பிடும் மாத்­தி­ரை­களால் கூட இவை தோன்­றக்­கூடும். கல் அடைப்பு ஏற்­பட்­டிருதாலும் இம்மாதி­ரி­யான கிட்னி பாதிப்பு ஏற்­படும்.

கிட்னி பயாப்சி எடுத்து சோதித்து இதற்­கு­ரிய சிகிச்­சை­ய­ளிக்க இயலும். இதனை அலட்­சி­யப்­ப­டுத்­தினால் தான் கிரானிக் கிட்னி டிஸீஸ் வரும். அதனை குணப்­ப­டுத்­து­வது கடினம். ஆனால், டயா­லிஸஸ் மற்றும் சிறு­நீ­ரக மாற்று சத்­திர சிகிச்சை மூலம் கட்­டுப்­ப­டுத்தி ஆரோக்­கி­ய­மான சூழலை உரு­வாக்­கலாம்.

லுபஸ் நோயால் கிட்னி பாதிப்­பிற்­குள்­ளாகும் என்­கி­றார்­களே இதற்­கான விளக்­கமும், சிகிச்­சையும் குறித்து..?

லூபஸ் என்ற நோயாலும் கிட்னி பாதிக் கப்­ப­டலாம். ரூமடாய்ட் நோயி­னாலும் கிட்னி பாதிக்­கப்­ப­டலாம். எம்­மு­டைய உடலை பாது­காக்கும் நோயெ­திர்ப்பு சக்­தி­யு­டைய செல்­களின் செயல்­பாட்டில் நடை­பெறும் சிறிய கோளா­று­களே லூபஸ் என்று குறிப்­பி­டு­கி­றார்கள். அதா­வது ஓடடோ இம்யூன் டிஸ்­ஒர்டர் என்றும் இதனை குறிப்­பி­டலாம். இதனை நாங்கள் லூபஸ் நெஃப்­ரடீஸ் என்று குறிப்­பி­டு­கிறோம். இதனால் உடலில் பல உறுப்­புகள் பாதிக்­கப்­படலாம். இதன் கார­ண­மாக கிட்னி பாதிக்­கப்­படும் போது அவ்­வ­கை­யான நோயா­ளிகள் எங்களிடம் சிகிச்­சைக்­காக வரு­கி­றார்கள். இது அனைத்து வய­தி­ன­ருக்கும் வரும் என்­றாலும் 20 முதல் 45 வய­தி­ன­ரையே அதிகம் தாக்குகிறது என்றும், அதிலும் பெண்­களை அதிகம் தாக்­கு­கி­றது என்றும் ஆய்வின் மூலம் கண்டறிந்­தி­ருக்­கி­றார்கள். இதற்கு தொடர் சிகிச்சை எடுத்தால் குணப்­ப­டுத்­திட இயலும்.

மக்கள் ஏன் கிட்னி பாதிப்­பிற்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­ப­தில்லை?

ஏனெனில் இதற்­கான அறி­கு­றிகள் உட னடி­யா­கவும், வெளிப்­ப­டை­யா­கவும் தெரிய வரு­வ­தில்லை. இத­யத்தில் ஏதேனும் ஒரு சிறிய பாதிப்பு என்­றாலும் கூட இத­யப்­ப­கு­தியில் ஒரு சிறிய வலி அறி­கு­றி­யாக ஏற்­ப­டு­கி­றது. இதற்கு பயந்து உட­ன­டி­யாக மருத்­து­வர்­களை சந்­தித்து ஆலோ­சனை பெறு­வார்கள். ஆனால் கிட்­னியைப் பொறுத்­த­வரை, சிறு­நீ­ர­கத்தில் கிரி­யாட்டீன் அளவு ஓர் எல்­லைக்கு மேல்­அ­தி­க­ரித்தால் தான் அதன் பாதிப்பு தெரி­ய­வரும். அதேப் போல் சிறுநீர் பிரி­வதில் ஏதேனும் அசௌ­க­ரியம் இருந்தால் தான் மருத்­து­வர்­களை சந்­திப்­பார்கள். அது வரை பாதிப்­பு­ட­னேயே மக்கள் இருக்கிறார்கள். மக்­களை பய­மு­றுத்­து­வ­தற்­காக இதனை சொல்­ல­ வில்லை. இருந்­தாலும், ஒரு எச்­ச­ரிக்­கைக்­காக சொல்­கிறேன். டய­லா­லிஸஸ் செய்யும் நோயா­ளிகள் அதி­கபட்சம் ஐந்து ஆண்­டு­களில் 50 சத­வீ­தத்­தி­ன­ருக்­குமேல் மர­ணத்தை சந்­திக்­கி­றார்கள். அந்த வகையில் பார்த்­தோ­மானால் புற்­று­நோயை விட மரணத்தை நோக்கி வேக­மாக பய­ணிக்­கிற ஒரு நோயா­கத்தான் கிட்னி பாதிப்பை மருத்­துவ துறை பார்க்­கி­றது.

அதி­க­மாக தண்ணீர் அருந்­தி­னாலும் சிறு­நீ­ரகம் பாதிக்­கப்­ப­டு­ம். இது உண்­மையா?

ஒருவர் தனக்கு தேவை­யான அளவை விட அதி­க­மாக தண்ணீர் அருந்­தி­னாலும் அதனால் கிட்­னியின் செயல்­பாட்டில் எந்தவித பாதிப்பும் அதி­க­ளவில் ஏற்­ப­டு­வ­தில்லை. ஆனால் சிறுநீர­கத்தில் ஏதேனும் ஒரு பாதிப்பு இருந்து நீங்கள் அதி­க­மாக தண்ணீர் அருந்­தினால் அதன் போது ஏதேனும் பாதிப்பு அதி­க­ரிப்­ப­தற்கு வாய்ப் புண்டு. அதன் கார­ண­மா­கவே கை கால் வீக்கம், மூச்சு திணறல் போன்­றவை தோன்றும்.

சிறு­நீ­ரக தொற்று தற்­போ­து­ அ­தி­க­ரித்­துள்­ளது என்றும், அதிலும் குறிப்­பாக பெண்கள் இதனால் அதி­க­ளவில் பாதிக்­கப்­ப­டு­கி­றார்கள் என்றும் கூறு­கி­றார்­களே இதற்­கான மருத்­துவ விளக்கம் என்ன?

சிறு­நீ­ரக தொற்று உரு­வா­கு­வ­தற்கு பல கார­ணங்கள் இருக்­கின்­றன. பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் போது அந்த சுற்றுப் புறத்தில் தூய்­மை­யில்­லா­தி­ருந்­தாலும் இவை ஏற்­ப­டக்­கூடும். காய்­ச்சல், சிறுநீர் பிரியும் பாதையில் எரிச்சல், அசௌ­க­ரியம், குறை­வா­கவோ அல்­லது இரத்தம் கலந்தே பிரி­வது போன்ற பல அறி­கு­றிகள் சிறு­நீ­ரகத் தொற்றால் ஏற்­ப­டக்­கூ­டி­யவை. இத்­த­கைய அறி­கு­றிகள் தோன்­றி­ய­வுடன் மருத்­து­வர்­களை சந்­தித்து ஆலோ­ச­னையும் சிகிச்­சையும் பெறு­வது தான் நல்­லது.

டயா­ப­டீஸால் ஏற்­படும் கிட்னி பாதிப்பு குறித்து தெரிந்­து­கொள்­ள­வேண்­டிய விட­யங்கள்?

கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாத சர்க்­கரை நோயால் கிட்னி பாதிக்­கப்­ப­டு­வது உண்மை. இதனை யாரும் மறுக்க இய­லாது. அதனால் தான் ஒவ் வொரு முறையும் வலி­யு­றுத்திச் சொல்­கிறோம். டயா­படீஸ் வந்­து­விட்டால் அதனை கட்­டுக்குள் வைத்­தி­ருக்­க­வேண்டும்.

அத்­துடன் நில்­லாது ஆண்­டு­தோறும் சிறு­நீ­ரக பரி­சோ­த­னையை செய்து கொள்­ள­வேண்டும். அதே போல குருதி அழுத்தம் குறித்த எச்­சரிக் கையு­டனும் இருக்­க­வேண்டும். இவர்கள் தங்­க­ளது சிறு­நீரில் புரதம் அதி­க­மாக வெளி யேறினால் உட­ன­டி­யாக மருத்­து­வர்­களை சந்­தித்து சிகிச்சை எடுத்துக் கொள்­ள­வேண்டும். இந்த புரதம் குறித்த பரி­சோ­த­னையை அரு கிலுள்ள மருத்­துவ ஆய்­வ­கத்தில் கொடுத்து தெரிந்து கொள்­ளலாம்.

முழுக்க முழுக்க வேறு வகை­யான இரத்த பிரிவு இருந்­தாலும் தற்­போது சிறு­நீ­ரக மாற்று சத்­திர சிகிச்சை வெற்­றி­ய­டை­வதன் பின்­னணி குறித்து..?

மருத்­துவ ஆய்வின் முன்­னேற்­றத்­தையே இது காட்­டு­கி­றது. இது போன்ற மாற்று இரத்த பிரி­வுள்ள சிறு­நீ­ரக மாற்று சத்­திர சிகிச்சை செய்­வ­தற்கு முன் உடலில் உள்ள நோயெ­திர்ப்பு சக்­தியின் அளவை கட்­டுப்­ப­டுத்­து­வதும், புதி­தாக பொருத்­தப்­ப­ட­வி­ருக்கும் சிறு­நீ­ர­கத்தை உடல் ஏற்கும் அள­விற்கு அதற்­கான முன் தயாரிப்பும் தற்­போது அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு வெற்­றி­கர மாக செயல்­பட்டு வரு­கி­றது.

சிறு­நீ­ரக பாதிப்பு ஏற்­ப­டாத வண்ணம் தற்­காத்து கொள்­வது எப்­படி?

இதற்கென தனி­யாக எந்­த­வொரு நட வடிக்கையும் இல்லை. ஏனெனில் இவை உடல் இயக்­கத்தின் அடிப்படையான உறுப்பு. அத் துடன் உடலில் எந்த பகுதியில் பாதிப்பு வந்தாலும் அதனை உடனடியாக கவனித்து சீரமைத்துக் கொள்ளவேண்டும். அதனை அலட்சியப்படுத்தினால் அதனால் கூட சிறு நீரகம் பாதிக்கப்படலாம். அதனால் உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் தான் கவனம் செலுத்தவேண்டும். சரிசமவிகித சத்துள்ள உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தமில்லாமல் இயங்குதல் ஆகியவற்றை சீராக வைத்துக் கொண்டால் சிறுநீரக பாதிப்பு வராது. மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந் தால் தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண் 0091 7708820463 மற்றும் மின்னஞ்சல் முகவரி vikramsagartv@gmail.com

சந்திப்பு:- பரத்

தொகுப்பு:- அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29