மெத்தியூ நீச்சலில் ! தெஹானியும் அனிகாவும் நாடு திரும்புகின்றனர்

Published By: Digital Desk 2

27 Jul, 2021 | 12:09 PM
image

டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்

இலங்கையின் அனுபவம் வாய்ந்த நீச்சல் வீரர் மெத்தியூ அபேசிங்க இன்று டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் ‍போட்டிப் பிரிவில் 100 மீற்றர் ப்ரீஸ்டைலில் போட்டியிடுகிறார்.

இந்த நிகழ்வில் ஒன்பது பூர்வாங்க சுற்று போட்டிகள் இடம்பெறும், 71 விளையாட்டு வீரர்கள் போட்டியிடுவார்கள். இந்த ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் முதல் 16 வீரர்கள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

அமெரிக்காவில் பிறந்து அங்கு நீண்ட காலமாக பயிற்சி பெற்ற மெத்தியூ இலங்கைக்கான சர்வதேச அரங்கில் நுழைந்து தற்போது ஒன்பது தேசிய நீச்சல் சாதனைகளை படைத்த சிறந்த இலங்கை நீச்சல் வீரராக வலம் வருகின்றார்.

அசாமில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்காக ஏழு தங்கப் பதக்கங்களை வென்றார் மெத்தியூ. 

ரியோ ஒலிம்பிக் உட்பட பல முக்கிய நிகழ்வுகளிலும் அவர் போட்டியிட்டுள்ளார். உலக நீச்சல் சம்பியன்ஷிப்பிற்கு நேரடியாக தகுதி பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையையும் மெத்தியூ அபேசிங்க பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற நீச்சல் வீராங்கனை அனிகா கபூர் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை தெஹானி எகொடவெல ஆகியோர் டோக்கியோ கிராமத்தை விட்டு வெளியேறினர்.

அனிகா மலேசியாவின் கோலாலம்பூருக்கு பறந்தார், தெஹானி இலங்கைக்கு புறப்பட்டார். 10 மீற்றர் ஏயார் ரைபிள் போட்டியில் பங்கேற்ற தெஹானி எகொடவெல 50 இல் 49 ஆவது இடத்தையும், 100 மீற்றர் பட்டர்ஃபிளை போட்டியில் பங்கேற்ற அனிகா கபூர் 33 விளையாட்டு வீரர்களில் 32 ஆவது இடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00