இன்றைய தினம், மேலும் 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சீனாவின் பீஜிங் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 565 என்று விசேட விமானம் மூலமே தடுப்பூசிகள், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை 10.10 மணியளவில் தடுப்பூசிகள் வந்திறங்கிய நிலையில், சீனா அரசாங்கத்தினால் ஒரே தடவையில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட அதிகளவான சைனோபாம் தடுப்பூசி தொகை இதுவென்பதுவும் குறிப்பிடதக்கது.