பிரேசில் நாட்டில்  கொரோனா வைரஸ் தொற்றினால்  இதுவரை ஐந்தரை இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று கொரோனாவால் 578 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இறப்பு எண்ணிக்கை 550,502 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, பிரேசிலில் கொரோனாவால் கர்ப்பிணித் தாய்மார்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு,   இதுவரை 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள்.

அத்தோடு,  கொரோனா வைரஸால் உயிரிழந்த கர்ப்பிணித் தாய்மார்களில்  ஐந்து பேரில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு வசதியும், மூன்று பேரில் ஒருவருக்கு வென்டிலேட்டர் வசதியும்  கிடைத்திருக்கவில்லை.

பிரேசிலில்  கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஆரம்பத்திலிருந்து 1 கோடியே 97 இலட்சம்  தொற்றாளர்கள்  பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், 1 கோடியே 83 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் குணமடைந்துள்ளார்கள். மேலும் 45 சதவீதமான மக்கள் மட்டுமே குறைந்தபட்சம் முதலாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.