மலேசியாவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கெதிராக மலேசியா அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மலேசியாவிற்கு விஜயம் செய்திருந்த போது, மலேசிய தமிழர்களால் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதுமாத்திரமின்றி மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தர்.