நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று காலை 6.00 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தல் உத்தரவிலிருந்த விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் உறுதிபடுத்தியுள்ளது.