(டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது முறையாக பங்கேற்ற இலங்கையின் பட்மிண்டன் வீரர் நிலுக கருணாரத்ன தனது குரூப் பிரிவு போட்டிகளில் இரண்டிலும் தோல்வியைத் தழுவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து சோகத்துடன் வெளியேறினார்.

ரியோ ஒலிம்பிக்கின் முதல் பெட்மின்டன் போட்டியில் நிலுக்கா கருணாரட்ன தோல்வி

குருப் எவ் இல் இடம்பெற்றிருந்த நிலூக கருணாரத்ன கடந்த சனிக்கிழமை சைனிஸ் தாய்பே வீரரிடம் 2-0 என்ற செட்கணக்ககில் தோல்வியைத் தழுவிக்கொண்டார், 

இதனையடுத்து அதே பிரிவில் இரண்டாவது போட்டியில் இன்று விளையாடிய நிலூக இதில் அயர்லாந்து வீரரை எதிர்கொண்டார். இதிலும் 2-0 என்ற செட் கணக்கில் தோவியைத் தழுவிக்கொண்டார். 

முதல் செட்டை 21 - 16 என இழந்த நிலூக இரண்டாவது செட்டில் வெற்றிபெற்று கரையேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 21 -14 என இரண்டாவது செட்டையும் இழந்தார். இந்தத் தோல்வியோடு நிலூக்கவின் டோக்கியோ ஒலிம்பிக் பயணம் முடிவுக்கு வருகின்றது.