களனி மீகஹதென்ன பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தெல்கொட பகுதியில் வைத்து 25 வயது இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.