-கபில் -
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கும் கருத்து – பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக இன்றும் சர்வதேச சமூகத்தினால் பார்க்கப்படுகின்ற நிலையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக அறியப்படுபவர் சுமந்திரன்.

அவ்வாறான ஒருவர், ஒரு நாட்டின் தலையீட்டைப் பற்றி இவ்வாறு பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருப்பது ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடிய விடயம் தான். வடக்கில் சீன முதலீட்டாளர்கள் கடலட்டை பண்ணைகளை அமைப்பது போன்ற விடயங்களில்ஈ அண்மைய நாட்களில் சீன எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் வீதி அமைப்பு பணியில் சீனர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாகவும், இங்குள்ள இளைஞர்கள் வேலையின்றி இருக்க சீனர்கள் எதற்கு என்று, நியாயமான கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார். எனினும், அந்தப் படத்தில் இருந்தவர் சீனர் அல்ல, கல்முனையை சேர்ந்தவர் என்பது அம்பலமானதும் அவர் தவறுக்கு மன்னிப்புக் கோரும் நிலை ஏற்பட்டது.

இந்த விவகாரங்களின் நீட்சியாகவே, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்ற சுமந்திரனின் கருத்து வெளிப்பட்டிருக்கிறது. அதற்காக அவர் சில நியாயங்களையும் முன்வைத்திருக்கிறார்.

ஒன்றுஇ நாங்கள் ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள், ஜனநாயகத்துக்கான போராட்டங்களை நடத்துபவர்கள், ஆனால் சீனா ஜனநாயக நாடும் அல்ல, அங்கு ஜனநாயகமும் இல்லை. ஒரு கட்சி ஆட்சி நடத்தும் நாடு என்பது. இரண்டு, சீனாவில் மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. மனித உரிமைகளுக்கும் மதிப்பில்லை என்பது.

மூன்றாவது, ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றிய போதெல்லாம், சீனா அதனை எதிர்த்திருக்கிறது. பாதிக்கப்பட்ட தரப்பினர் என்ற வகையில் எமக்கு எதிராக செயற்பட்டிருக்கிறது என்பது.

இந்த மூன்றும் சரியான விடயங்கள். இதில் எதுவும் தவறு கிடையாது.

சீன கம்யூனிச நாடு.  அங்கு ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. தனிக்கட்சி ஆட்சியில் அங்கு சர்வாதிகாரத்தனம் அதிகம் இருக்கும்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-25#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
https://bookshelf.encl.lk/.