-சத்ரியன் -
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே, அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சரியான தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றா என்ற விமர்சனங்கள் எதிர்க்கட்சிகளுக்குள் காணப்பட்டாலும், அதற்கு ஆதரவாக வாக்களிப்பதில் அவை ஒன்றிணைந்திருந்தன.

அதாவது நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்தவர்கள், ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள். உதய கம்மன்பிலவுக்கு எதிரான நின்றவர்கள், அவருக்கு ஆதரவாக – பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். இதுதான் இப்போதைய அரசியல் குழப்பத்தின் உண்மை நிலை. அமைச்சர் உதய கம்மன்பில எரிபொருள் விலை உயர்வை கடந்த மாதம் அறிவித்த போது, அது அரசாங்கத்தின் முடிவு என்பது அனைவருக்கும் தெரியும்.

அமைச்சரவையில் அதுபற்றிப் பேசப்படவில்லை என்று சில அமைச்சர்கள் கூறியிருந்தாலும், நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாகவே, தான் விலை அதிகரிப்பு முடிவை அறிவித்ததாக கூறியிருந்தார் உதய கம்மன்பில. இந்தநிலையில் உதய கம்மன்பிலவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அவரை பதவி விலக வேண்டும் என்றார். 

அவருக்கு ஆதரவாக இன்னும் சில அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தான், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்திருந்தது. ஆனால் அது மிகவும் காலம் தாழ்த்தப்பட்டு, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதால், அரசாங்கத்துக்குள் இருந்த பூசல்கள்- மறைந்து ஒற்றுமையாக அதனை எதிர்க்கின்ற நிலை தோன்றியிருக்கிறது.

ஆளும்கட்சிக்குள் பிளவுகள் தென்பட ஆரம்பித்த போது, அந்த எதிர்ப்புகளும், பிளவுகளும் - உண்மையானதா என்று பரிசோதிக்க இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கைகொடுத்திருக்கிறது. உதய கம்மன்பிலவுக்கு எதிரான பொதுஜன பெரமுனவின் எதிர்ப்பு, வெறும் பூச்சாண்டி என்பது இப்போது வெளிப்படையாகியிருக்கிறது.

அதாவது பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி, நாட்டு மக்களை ஆளும்கட்சி முட்டாளாக்கியிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-25#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
https://bookshelf.encl.lk/.