மன்னார் - முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் சட்ட விரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் முசலி பிரதேச செயலகத்துக்கு முன்பாக வை.எப்.சி அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பூனாட்சிகுளம், பண்டாரவெளி போன்ற பகுதிகளில் உள்ள அரச காணிகள் தனியார் சிலரால் அடாத்தாக பிடிக்கப்படுவதகவும் இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கும், இளைஞர்களுக்கும் காணிகள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் எனவே இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் விரைவில் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
காணிகளை விடுதலை செய்து காணியில்லாத ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கவும், காணி அத்துமீறலை உடனே நிறுத்து, அடாவடி காணி பிடித்தலை உடனடியாக நிறுத்தவும், அடாத்தாக காணி பிடித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், எமது பகுதியில் பணம் படைத்தவர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கலே காணிகளை அபகரிக்கின்றனர் போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டத்தின் பின்னர் கோரிக்கை அடங்கிய மகஜரை முசலி பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM