(நா.தனுஜா)
அரசாங்கத்தின் 'கிராமத்துடனான உரையாடல் - வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' என்ற செயற்றிட்டத்தின்கீழ் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
இதன்கீழ் பொதுமக்களால் முன்வைக்கப்படும் யோசனைகள் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்படாத வகையிலும் சூழலுக்கு ஏற்புடைய விதத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் மீமுரேவில் நடைபெற்ற 'கிராமத்துடனான உரையாடல் - வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' என்ற செயற்திட்டத்தின்கீழான கலந்துரையாடலின்போது அப்பகுதி மக்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகைள் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில், அவை தொடர்பில் மதிப்பீடுசெய்யும் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவின் தலைமையில் மீமுரே ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.
அதன்படி ஏற்கனவே முன்வைக்கப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டம் நூற்றுக்கு 85 சதவீதம் வரையில் பூர்த்தியடைந்திருப்பதாக இக்கூட்டத்தின்போது சுட்டிக்காட்டப்பட்டது.
அதேவேளை மீமுரே பகுதி மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற யோசனைகளில் மேலும் 15 சதவீதமானவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருப்பதுடன் அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நேற்றைய தினம் உரிய பிரிவுகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் மேற்குறிப்பிடப்பட்ட கூட்டத்தின்போது, இதுவரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தலில் தொடர்ச்சியான தாமதத்தை எதிர்கொண்டிருக்கும் யோசனைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
அத்தோடு மீமுரே பிரதேச மக்களுக்குப் பயன்படக்கூடியவகையில் மீமுரே பொலிஸ் காவலரண் ஊடாக 1990 அவசர அம்பியூலன்ஸ் சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைக்குத் தீர்வாக மினிப்பே மற்றும் உடுதும்பர கல்வி வலயத்தை இணைக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அவ்விரு கல்வி வலயங்களையும் வலுப்படுத்துவதற்கு அவசியமான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஹபுகஸ்கும்புர - பல்லேகந்த வீதியில் 9 கிலோமீற்றர் தூரத்திற்கு எவ்வித சூழல் பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் புனரமைப்புப்பணிகளை முன்னெடுக்குமாறும் 5000 பாலங்களை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின்கீழ் தலகுனே, ஹபுதன்டாவல பாலத்தை நிர்மாணிக்குமாறும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா உரிய அதிகரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளை, 'சுற்றுச்சூழலைப் பாதுகாத்தவாறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்' என்ற ஜனாதிபதியின் கொள்கையைக் கருத்திற்கொண்டு, இப்பகுதியில் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவகையில் முன்வைக்கப்பட்ட செயற்திட்ட யோசனைகள் மேற்படி கூட்டத்தின்போது நிராகரிக்கப்பட்டன.
இவையனைத்தும் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகளாக இருந்தாலும்கூட, நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்குப் புறம்பாகவோ அல்லது சூழலுக்குப் பாதிப்பேற்படக்கூடிய வகையிலோ அவற்றைச் செயற்படுத்தமுடியாது என்று இதன்போது நிமல் லன்சா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அவற்றுக்கான மாற்றுயோசனைகள் தொடர்பில் ஜனாதிபதியுடனும் 'கிராமத்துடனான உரையாடல்' தேசிய செயற்திட்டக்குழுவுடனும் கலந்தாலோசிப்பதாகவும் அவர் இதன்போது வாக்குறுதியளித்துள்ளார்.
மேலும் 'கிராமத்துடனான கலந்துரையாடல் - வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' என்ற செயற்திட்டத்தின் ஊடாக கிராமங்களில் வாழும் வறிய மக்களின் பொருளாதாரத்தையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு உருவாகியிருப்பதாகவும் இவ்வருட முடிவிற்குள் மீமுரே பிரதேசத்தில் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்ட அனைத்து யோசனைகளையும் பூர்த்திசெய்வதை இலக்காகக் கொண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
அத்தோடு சிறுநிர்மாணம், காணி உறுதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொடுத்தல், சிறியளவிலான மின்னுற்பத்தி நிலையம் அமைத்தல், நீர்வழங்கல் வசதிகளை ஏற்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதுடன் அவற்றை நிறைவேற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் இராஜாங்க அமைச்சரால் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM