ரஷ்­யாவைச் சேர்ந்த பர­சூட்டில் குதித்து சாகஸம் செய்யும் வீரர்­கள் இரு விமா­னங்­க­ளி­லி­ருந்து குதித்து நடு­வானில் நத்தார் மரம் போன்ற      தோற்­றத்தை ஏற்­ப­டுத்தி புதிய சாத­னை­யொன்றைப் படைத்­துள்­ளனர்.

மேற்­படி சாகஸ வீரர்­களின் சாத­னையை மேற்­படி குழு­வி­ன­ருடன் விமா­னத்­தி­லி­ருந்து குதித்த ரஷ்ய கொலொம்னா பிராந்­தி­யத்தைச் சேர்ந்த விதாலி டுடோனோவ் என்ற 19 வயது இளைஞர் படமாக்கியுள்ளார்.