பைசர் தடுப்பூசிகளை மன்னார், வவுனியா மீனவர்களுக்கும் வெளிநாடு செல்ல உள்ளோருக்கும் வழங்க தீர்மானம்

Published By: Digital Desk 2

26 Jul, 2021 | 02:08 PM
image

எம்.மனோசித்ரா

இலங்கைக்கு நான்காவது கட்டமாக 90 000 பைசர் தடுப்பூசிகள் இன்று திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்தன.

இம்முறைப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள இந்த தடுப்பூசித் தொகையை தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ள 8000 பேருக்கும் , உயர்கல்விக்காக வெளிநாடு செல்லவுள்ள மாணவர்களுக்கும் மற்றும் மன்னார் , வவுனியா மாவட்டங்களிலுள்ள மீனவ சமூகத்திற்கும் வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் பைசர் தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டுக்கு உபயோகிப்பதற்கு இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் அனுமதி வழங்கியது.

முதற்கட்டமாக 26 000 பைசர் தடுப்பூசிகள் இம்மாதம் 5 ஆம் திகதியும் , இரண்டாம் கட்டமாக 26 000 பைசர் தடுப்பூசிகள் இம்மாதம் 12 ஆம் திகதியும் , மூன்றாம் கட்டமாக 70 200 பைசர் தடுப்பூசிகள் இம்மாதம் 19 ஆம் திகதியும் பெற்றுக் கொள்ளப்பட்டன.

அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளைப் முதற்கட்டமாக பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக பைசர் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக ஆரம்பத்தில் அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் , பின்னர் அந்த தீர்மானம் கைவிடப்பட்டது. நாட்டில் இதுவரையில் 113 967 பேருக்கு பைசர் தடுப்பூசிகள் முற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை மேலும் 1.6 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையவுள்ளன. இலங்கையில் இதுவரையில் 5 565 424 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் முதற்கட்டமாகவும் 1 406 224 பேருக்கும் இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் சைனோபார்ம் தடுப்பூசிகளே அதிகளவானோருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50