கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Yediyurappa resigns

மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் ஆளுநரை சந்தித்து இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் சற்று முன்னர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கர்நாடகாவின் முதல்வராக 4 முறை பதவி வகித்திருக்கும் எடியூரப்பா, அம் மாநிலத்தில் அதிக முறை முதல்வர் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா (வயது 78),  தலைமையிலான பா.ஜ.க, அரசு 2019 ஜூலை 26 இல் அமைந்தது. இன்றுடன் அவரது தலைமையிலான ஆட்சி, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.பா.ஜ.க,வை பொறுத்தவரை, 75 வயதானவர்களுக்கு கட்சி மற்றும் ஆட்சியில் பெரிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை.

அந்த வகையில், எடியூரப்பாவுக்கு 78 வயதாவதால், அவரின் வயதை காரணம் காட்டி, பதவியிலிருந்து இறக்குவதற்கு பா.ஜ.க, மேலிடம் முடிவு செய்தருந்ததாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.