சீனாவில் கடுமையான மழை காரணமாக வெள்ளபாதிப்பு ஏற்பட்டு குறையாத நிலையில் நேற்று சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தை இன்-பா என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது.

இதேவேளை  ஷெஜியாங் மாகாணத்தில் ஷங்காய் நகரில் 360,000 பேர் புயல் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மணிக்கு 155 கிலோ மீற்றர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதில்  நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன் வீதிகளில் மின்கம்பங்கள் சரிந்து வீழந்துள்ளன.

வீடுகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள் பலமைல் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டன.

இதேவேளை, அங்கு புயலை தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகின்றது. 

அதேவேளை  புயல் காரணமாக ஷெஜியாங் மாகாணத்தின் ஷாங்காய் நகரில் நூற்றுக்கணக்கான விமானசேவைகள் இரத்து செய்யப்பட்டன. அதேபோல் ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் புயல் மழை தொடர்பான சம்பவங்களில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.