அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் ஓராண்டுக்குப் பின் நடத்தப்பட்ட வெப்பக் காற்று பலூன் திருவிழாவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நியூஜெர்சியில் உள்ள ரிடீங்டன் பகுதியில் வெப்ப காற்று பலூன் திருவிழா 37 ஆண்டாக  நடைபெற்று வந்தது. 

கொரோனாவால் கடந்த ஆண்டு திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டு பலூன்  திருவிழா மிகவும் பிரபலமாக இருந்தது, 170,000 பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

இந்நிலையில், 38 ஆவது ஆண்டாக இம்முறை 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை உற்சாகத்துடன் நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வெப்பக் காற்று பலூனில்  பறந்தபடி இயற்கை அழகை ரசித்தனர்.