சீனாவின் இமாலய விரிவாக்கம் 

Published By: J.G.Stephan

26 Jul, 2021 | 06:05 PM
image

- லோகன் பரமசாமி -

“பீஜிங் தலைமை தனது விரிவாக்கபோக்கை நியாயப்படுத்தும் வகையில்இறையாண்மை, பிராந்திய ஒற்றுமை, மனித நேய உதவிகள் என்று மேற்குலகின்  சித்தாந்தங்களையே கருவிகளாக பயன்படுத்தி வருகின்றது”

இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்க கூடிய வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் ஒரு ஒடுங்கிய பாதைதான் இந்தியாவின் ‘கோழிக்கழுத்து’ என்று அழைக்கப்படும் சிலிகுரி  பிரதேசமாகும்.  சிக்கிம், அசாம், மேகாலயா மிசோராம், மனிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம்  ஆகிய ஏழு மாநிலங்களுக்கும்  இந்திய நிலவளித் தொடர்பை கொண்டுள்ளது. இந்த ஒடுங்கிய பாதை புதுடில்லியின்  வழங்கல் பாதையாக மட்டுமல்லாது. இந்த ஏழு மாநிலங்களின் மீதான இறையாண்மையை உறுதி செய்யும் தொடர் நிலபரப்பாகவும் பார்க்கப்படுகிறது.

சிக்கிம் மாநிலத்தில் உள்ள நடைமுறை உண்மை கட்டுப்பாட்டு கோடுகளின் மிக அருகே சீனா தனது அதிவசதிகள் கொண்ட வீதிக் கட்டமைப்புகளையும் இதர வசதிகளையும் நிர்மாணித்து வருகிறது.  இந்திய அதிகாரிகள் இந்த நடவடிக்கைகள் குறித்து தமது அச்சத்தையும் சீன திட்டங்கள் மீதான சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர். 

இங்கே ‘நடைமுறை உண்மை கட்டுபாட்டு கோடு’ என்று குறிப்பிடுவது இந்த எல்லை கோடுகள் சர்வதேச அளவில் இரு நாடுகளாலும் நிரந்தரமாக அங்கீகரிக்கப்பட்ட  எல்லைக்கோடுகள் அல்ல என்பதே பொருளாகும் என்ற விடயத்தினை இங்கே குறிப்பட வேண்டும்.  எந்த நேரத்திலும் தேச அரசியல் இராஜதந்திர இராணுவப்பலம் இந்த எல்லைக் கோடுகளை மாற்றியமைக்கலாம்.

கடந்த வருடம் ஜுன் மாதம் 15 ஆம் திகதி கல்வான் பள்ளத்தாக்கு பிரதேசத்தில் இந்திய இராணுவத்தினருக்கும் சீன மக்கள் விடுதலைப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பு சண்டையில் 20 இந்திய இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கதாகும். அதிலிருந்து இரு தரப்பும் எல்லைப்பிரதேசங்களில் இராணுவ கெடுபிடிகளை அதிகரித்து வந்த வண்ணமுள்ளனர்.  

இதனால் தொடர்ச்சியான பதட்டநிலை கடந்த பல மாதங்களாக இருந்து வருகிறது. அதேவேளை இந்தியாவினால் உரிமை கோரப்பட்டு வந்த மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தனக்குரியது என்று கூறிவருகிறது. அருணாச்சலப் பிரதேசம் உண்மை எல்லைகோட்டிற்கு உள்ளேயே அதாவது இந்தியாவின் பக்கமே இருக்கிறது. ஆனாலும் சீனா தனது செல்வாக்கிற்குள் உட்பட்ட பிரதேசம் என்றே அதனைக் கூறிவருகிறது. 

அதேபோல சுமார் 60 கிலோமீற்றர் நீளமும் 20 கிலோ மீற்றர் அகலமும் கொண்ட சிலிகுரி பிரதேசம் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தப் பிரதேசத்தைப் பாதுகாப்பதில் தற்பொழுது இந்தியா மிகப்பெரும் கவனம் செலுத்தி வருகிறது. வடக்கே நேபாளத்தையும் தெற்கே பங்களாதேஷத்தையும் கொண்டிருக்கும் சிலிகுரி ஒழுங்கைப் பிரதேசம் சீனா, இந்தியா, நேபாளம், பங்களாதேஷம் என்ற ஒரு சர்வதேச சர்ச்சைக்குரிய பலவீனமானதும் பாதிப்பிற்குள்ளாக கூடியதுமான பிராந்தியமாக கணிப்பிடப்படுகிறது.

இதேபோன்று சிக்கிம் மாநிலத்திற்கும் பூட்டானுக்கும் இடையில் உள்ள சும்பி பள்ளத்தாக்குப் பிராந்தியத்திலும் சீனா மிகவேகமாக வீதி அமைத்தல் உட்பட போக்குவரத்து வசதி கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. திபெத்தின் தென்பிராந்தியமாக கருதப்படும் இந்த பள்ளத்தாக்கில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் எந்த நேரமும் சீன மக்கள் விடுதலைப் படைகளின் பாரிய நகர்வுகளை முன்னெடுக்க கூடியதற்கான வசதிகளை கொண்டவை என்றே இந்திய அதிகாரிகளும், மேற்குலக நாடுகளின் செய்மதிப்படங்களும் தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றன. 


இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-25#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22