நாட்டில் சந்தையில் விற்கப்படும் அனைத்து சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எடையை கிலோ கிராமில் காண்பிப்பது கட்டாயமாக்குகிறது.

இதுதொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 18 லீற்றர் (9.6 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை ஆயிரத்து 150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆயிரத்து 259 ரூபாயாகவும் வவுனியா மாவட்டத்தில் ஆயிரத்து 216 ரூபாயாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 243 ரூபாயாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 242 ரூபாயாகவும் மன்னார் மாவட்டத்தில் ஆயிரத்து 234 ரூபாயாகவும் திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரத்து 217 ரூபாயாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்து 250 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No description available.No description available.