டுபாய் விமானத்தில் விமான பணிப்பெண்ணை கட்டியணைத்து முத்தமிட முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தன்சானியாவில் இருந்து டுபாயிற்கு விமானத்தில் பயணித்த நபரை விமானம் டுபாயில் தரையிறங்கியதும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் விமான பணிப் பெண் ஒருவருரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமையால்  கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விமான பணிப்பெண்ணிடம் அந்த நபர் முதலில் செல்பி எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டுள்ளார்.

அவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள நபரின் அருகில் சென்ற போது அவரை கட்டியணைந்து முத்தமிட முயற்சி செய்துள்ளார்.

குறித்த பணிப்பெண் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் பெயரிலே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டமையால் அவருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.