(ஆர்.யசி)

சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்காவிட்டால், முழு மலையக மக்களையும் இணைத்துக்கொண்டு கொழும்பில் குதிப்போம், எமது பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இக்கட்டான நிலையிலும் மலையகத்தில் 24 மணிநேர வைத்தியசாலை இல்லை: வடிவேல் சுரேஷ்  | Virakesari.lk

அத்தோடு  இவ்வாறான காமக்கொடூடர்களை இலங்கையின் சட்டத்தால் தண்டித்து போதாது. சவூதி அரேபியாவில் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கும்  கொடூரமான தண்டனையை இவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இல்லத்தில் சிறுமி ஹிஷாலினி மரணமடைந்ததை அடுத்து மலையக அரசியல் தலைமைகள் கடும் கண்டனக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கூறுகையில்,

இந்த நிலைமை ஹிஷாலினிக்கு ஏற்படலாம், பாத்திமாவுக்கு ஏற்படலாம் அல்லது தம்மிக்காவுக்கு ஏற்படலாம்.

தமிழ் சிறுமியோ, சிங்கள சிறுமியோ அல்லது முஸ்லிம் சிறுமியோ யாராக இருந்தாலும் இவ்வாறான நிலை ஏற்படக்கூடாது.

யாருடைய வறுமையையும் பயன்படுத்திக்கொண்டு துஸ்பிரயோக செயற்பாடுகளில் எவரும் ஈடுபடக்கூடாது.

இப்போது சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்காவிட்டால், முழு மலையக மக்களையும் இணைத்துக்கொண்டு கொழும்பில் குதிப்போம்.

நாம் இனியும் வேடிக்கை பார்க்க மாட்டோம். எமது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இப்போது விசாரணைகள் என கூறிக்கொண்டு யாரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது. இந்த விடயத்தில் இழுத்தடிப்பு இடம்பெற்றால் பின்னர் எம்மை கெட்டவர்கள் என கூற வேண்டாம். 

இவ்வாறு மோசமாக செயற்படும் காமக்கொடூடர்களை இலங்கையின் சட்டத்தால் தண்டித்து போதாது. சவூதி அரேபியா போன்ற நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கும் மிக கொடூரமான தண்டனையை இவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். கல்லால் அடித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறன சட்டங்களை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.