மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவருமில்லை என நினைக்க வேண்டாம். - திகாம்பரம் 

Published By: Digital Desk 4

25 Jul, 2021 | 09:27 PM
image

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு யாரும் இல்லை என நினைக்க வேண்டாம். நாங்கள் இருக்கின்றோம்.

தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கான ஊதியம் உரிய வகையில் வழங்கப்பட வேண்டும். 

இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், பெருந்தோட்ட கம்பனிகளின் நடவடிக்கைக்கு எதிராகவும் மஸ்கெலியாவில் இன்று (25.07.2021) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் எடுக்கப்பட்டது.

இதற்கமைய தோட்ட நிர்வாகங்கள் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் ஒரு சில தோட்டங்களில் 20 கிலோ கொழுந்து பறித்தால்தான் ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது.

குறிப்பாக மஸ்கெலியா பிளான்டேசன் இந்த விடயத்தில் உறுதியாக உள்ளது. தோட்ட கம்பனியின் இந்த போக்கை அனுமதிக்க முடியாது. கொழுந்து உள்ள காலத்தில் 20 கிலோ எடுக்கலாம். இல்லாத காலத்தில் என்ன செய்வது?

ஆயிரம் ரூபாவை வழங்கமுடியாவிட்டால் தோட்டத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும். நாங்கள் அரசாங்கத்துடன் பேசி பிரச்சினைகளைத் தீர்க்கின்றோம்.

இரசாயன உர பயன்பாட்டுக்கு திடீரென விதிக்கப்பட்ட தடையால் பெருந்தோட்டத்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் 15 கிலோ பறிக்க முடியுமா என்றுகூட தெரியவில்லை. எனவே, உரத்தை இறக்குமதி செய்வதற்காவது அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்." - என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02