நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு  திட்டமிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தினால் பெப்ரவரி 26 ஆம் திகதி தற்காலிக வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்தார். இதன்போது நாட்டு மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமாக கடந்த வருடம் நவம்பர் 20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.