- டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே,பிரசாத் -

டோக்கியோ ஒலிம்பிக் மூலம் அறிமுகமான "ஸ்கேட்போர்ட்டிங்" விளையாட்டின் முதலாவது தங்கப்பதக்கத்தை  ஜப்பான்  நாட்டின்  இளம்  வரர் யூடோ ஹொரிகோம் வென்றார். 

இதன் மூலம் ஒலிம்பிக்கில் ஸ்கேட்போர்ட்டிங் போட்டியில் முதல் பதக்கத்தை வென்ற வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

 அதேபோல ஸ்கேட்போர்டிங் விளையாடில் வெள்ளிப் பதக்கம் பிரேசிலிய கெல்வின் ஹோஃப்லருக்கு சென்றது. அமெரிக்காவின்  ஸ்கேட்டர் ஜோ கர் ஈட்டன் வெண்கலத்தை வென்றார்.

ஸ்கேட்போர்டிங்கின் மிகப்பெரிய நட்சத்திர வீராகக கருதப்படும் அமெரிக்காவின் நைஜா ஹஸ்டன், எட்டு பேர் பங்கேற்ற இறுதிப் போட்டியில் 7ஆவது இடத்தைப் பிடித்து கொண்டார்.