இலங்கையின் பிரபல கெப்பிட்டல் மகாராஜா குழுமங்களின் தலைவர் ஆர்.ராஜமகேந்திரனின் இறுதிக் கிரியைகள் சற்று முன்னர் இடம்பெற்றது.

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர், ராஜமகேந்திரன் தனது 79ம் வயதில் இன்று அதிகாலை(25.07.2021) தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்நிலையில், அன்னாரின் இறுதிக் கிரியைகள், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று கொழும்பில் நடைபெற்றது.