(எம்.மனோசித்ரா)
சீனாவில் தயாரிக்கப்படும் சைனோபார்ம் தடுப்பூசிகள் மேலும் 1.6 மில்லியன் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நாட்டை வந்தடையவுள்ளன. 
இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள இந்த தடுப்பூசி தொகையை பொதியிடும் பணிகள் சீனாவின் - பீஜிங்நகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்று வருவதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் அதன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் காலை 5.45 மற்றும் 6.15 க்கு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான இரு விமானங்களில் குறித்த தடுப்பூசி தொகை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாகவும் சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.