சிரச, சக்தி ஊடக வலையமைப்பின் தலைமை நிறுவனமான  கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரன் காலமாகியுள்ள செய்தியை அறிந்தது பெரும் கவவையுற்றதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய இறைவணை பிரார்த்திப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.


மஹாராஜா நிறுவனத்தின் தலைவர் ,முகாமைத்துவ பணிப்பாளர் கிளி ராஜமஹேந்திரன் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த  நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாததொரு இழப்பாகும்.

இலங்கையின் ஊடகத்துறையின் வளர்ச்சிக்கும் ஏனைய தொழில்துறையின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளவராக கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.ராஜமகேந்திரன் திகழ்கிறார். அதேபோன்று மக்களுக்காக பல சமூக சேவைகளையும் இவர் செய்துள்ளார். அன்னாரின்  இழப்புக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துக் கொள்வதாகவும் செந்தில் தொண்டமான் தமது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.