எரிபொருள் விலை அதிகரிப்பை மையமாக வைத்து அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தோல்வியுற்றுள்ளது.
குறித்த பிரேரணையை 19ஆம் திகதி காலை சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார், அதனை முழுமையாக படிக்காது உரையாற்றியமையால் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ ஆகியோர் ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பினார்கள்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை உரிய முறையில் வாசிக்காமையை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தார்கள்.
எதிர்க்கட்சிக்கு எவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது என்பதுகூட தெரியாது என்று கூறி எள்ளிநகையாடினார்கள்.
இந்தச்சந்தர்ப்பத்தில் அமைச்சர் விமல் வீரவன்சவும் தனது பங்கிற்கு மரிக்காரை தாக்குவதற்கு முனைந்தார்.
எனினும் சொற்ப நேரத்திலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எழுந்தமையால் அந்த விடயம் அப்படியே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர் சில சமூக வலைத்தளங்களில் மரிக்காருக்கு ஆதரவாக மஹிந்த என்ற தலைப்புடன் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டதாம். இதன் பின்னணியில் ஆளும், எதிர்த் தரப்பினரின் சில உறுப்பினர்கள் உள்ளதாக தகவல்.
இவ்வாறிருக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, செயலளர் ரஞ்சித் மத்தும பண்டார, மரிக்கார் ஆகியோரைத் தவிர ஏனையவர்களுக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை நகர்த்தப்பட்டமை, உள்ளடக்கம், உரையாற்றுவதற்கு வழங்கப்பட்ட ஒழுங்குமுறை என்பது உட்பட பல்வேறு அதிருப்திகள் காணப்படுகின்றது.
இதனால் ஐ.ம.ச. எதிர்பார்த்த விளைவுகளை நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏற்படுத்தவில்லை. மாறாக அது எதிரணியையே திரும்பத் தாக்கியிருக்கின்றது.
ராஜித்த சேனாரட்ன, சரத் பொன்சேகா லக் ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்ட பலரும் இந்த நம்பிக்கையில்லாத பிரேரணையை தேவையில்லாத ஆணி என்று கூற ஆரம்பித்துள்ளார்கள்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் இது ஒரு ஊடக திருவிழாவாக காட்டப்பட்டு இருக்கின்றது என்று கடுமையான விமர்சனத்தை தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்காக இணைந்து ஓடியது என்று அதன் முக்கியஸ்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-25#page-5
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM