சிவலிங்கம் சிவகுமாரன்

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில்  மலையக பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து  தலைநகருக்கு  வீட்டுப்பணிப்பெண்களாகச் சென்ற சிறுமிகள் பலர்  மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். 

அந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் ஏற்படாத அதிர்வலைகளை தலவாக்கலை டயகம பிரதேசத்தை வசிப்பிடமாகக்கொண்டிருந்த ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமியின் மரணம் உருவாக்கியுள்ளது.

இதற்கு பிரதான காரணங்கள் இரண்டு. 

முதலாவது சமூக ஊடகங்களில்  இச்சம்பவம்  குறித்த நேர் மற்றும் எதிர்மறையான கருத்துப்பகிர்வுகள். 

இரண்டாவது குறித்த சிறுமி பணியாற்றிய இடமானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான ரிஷாத்பதியுதீனின் வீடு. 

ஏற்கனவே ரிஷாத்  மற்றும் அவரது சகோதரர் இருவரும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

தற்போது மரணத்தினால் சிறுமி ஹிஷாலினியின் அவரது மனைவியும் சிறுமியை அழைத்துவந்த முகவரும் பிறிதொரு நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இருவரில், ரிஷாத் எம்.பி கடந்த 17 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

டயகம சிறுமி ஹிஷாலினியின் மரணத்தை அரசியல்படுத்த வேண்டாம் என ஒரு பக்கம் சிவில் சமூகத்தினரும் முஸ்லிம் சமூகத்தினரும் கோரிக்கை முன் வைத்து வருவதை இங்கு நோக்கவேண்டும். 

சமூக ஊடகங்களில் பல முஸ்லிம் இளைஞர்களும் ஏனையோரும் இதை மத ரீதியாகவோ அல்லது இனரீதியாகவோ பார்ப்பதை தவிர்த்து நேர்மையான முறையில் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்பதையே வலியுறுத்தியுள்ளனர். 

இதை மிகவும் அவதானமாகவும் நிதானமாகவும் கையாள வேண்டிய ஒரு தேவை எதிர்கட்சிக்கும் அதில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கூட்டணி கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. 

இந்த விடயத்தை பாராளுமன்றில் கடந்த 20 ஆம் திகதி உரையாற்றும்போது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் சற்று பக்குவமாகவே கூறினார். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-25#page-7

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.