மூன்று பிள்ளைகளின் தாயான பாடசாலை ஆசிரியை தேவாலய காணியிலுள்ள கிணற்றில் வீழ்ந்து  தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையிலேயே ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

இச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்கந்தபுரத்தில் இடம்பெற்றுள்ளது. 

மரணமானவர் ஸ்கந்தபுரம் இல. 1 அ.த.க. பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றும் ஜெயரத்தினம் ஜெயவக்சலா (வயது 51) என கண்டறியப்பட்டுள்ளது.  

கடந்த சனிக்கிழமை காலை குறித்த ஆசிரியை வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் குறித்த தேவாலய காணியிலுள்ள கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடிக்க வந்த இரு மாணவிகள் கிணற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதனைக் கண்டு தேவாலய குருவிற்கு அறிவித்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்தே  சடலம் மீட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கிளிநொச்சி மரண விசாரணை அதிகாரி  க. திருலோமூர்த்தியால் மரணம் தொடர்பான   விசாரணை நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த மரணம்  தற்கொலை என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.