- டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் - 
டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாளான நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான பெட்மிண்டன் போட்டியில் இலங்கை நிலூக கருணாரத்ன தனது பிரிவில் பங்கேற்ற முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் போட்டியில் பங்கேற்ற நிலுக்க கருணாரத்ன, ஆரம்ப சுற்றின் முதல் சுற்றில் பெட்மிண்டன் தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள சீன தைபே 'வாங் சூ - வீ' யிடம் 2-0 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

எவ்(F) பிரிவில் விளையாடும் நிலுக, இன்று பூர்வாங்க சுற்றின் இரண்டாவது சுற்றில் விளையாடவுள்ளார். இந்தப் போட்டியில் அயர்லாந்து வீரர் நட் குயெனை எதிர்கொள்கின்றார்.  

மேலும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் 100 மீற்றர் பட்டர்பிளை போட்டியின் ஆரம்ப சுற்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனிகா கஃபூர், காலவரிசைப்படி 32ஆவது இடத்தைப் பிடித்தார்.

நிகழ்வின் முதல் பூர்வாங்க சுற்றில், அனிகா கஃபூர் 1 நிமிடம் 05 வினாடிகள் 3 புள்ளிகள் 3 என்ற நேரத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மகளிர் 100 மீற்றர் பட்டர்ஃபிளை நீச்சல் சம்பியன்ஷிப்பில் மொத்தம் 33 விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டனர். இதில் 5 ஆரம்ப சுற்றுகள் மற்றும் 16 விளையாட்டு வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.