-டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்-

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மகளிருக்கான நீச்சல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளது. முந்தைய சாதனையும் அவுஸ்திரேலியர்களிடமே இருந்தமையும் குறப்பிடத்தக்கது. அதன்படி டோக்கியோ ஒலிம்பிக்கின் முதலாவது உலக சாதனை இதுவென்பதும் விசேட அம்சமாகும்.

மகளிருக்கான 4 x 100 மீற்றர் பிரீஸ்டைல் அஞ்சல் நீச்சல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3:29.69 நிமிடங்களில் பந்தயத் தூரத்தை நீந்தி, முந்தைய சாதனையிலிருந்து 0,36 செக்கன்களை மீதமாக்கி உலக சாதனை படைத்துள்ளது. அத்தோடு தங்கப்பதக்கத்தை வென்றெடுத்தது.

இந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை 3:32.78 செக்கன்களில் நீந்திய கனடா அணி வென்றது. அமெரிக்க அணி 3:32.81 செக்கன்களில் பந்தயத் தூரத்தை அடைந்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கிக் கொண்டது.