இலங்கையில் ஒரே நாளில் அதிகளவிலான கொவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை நேற்றைய தினம் நிர்வாகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி நேற்றைய தினம் 412,111 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த புள்ளி விபரங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றில் சீனாபோர்ம் தடுப்பூசிகளின் முதல் டோஸ் 306, 622 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது, அதேநேரத்தில் அதன் இரண்டாவது டோஸ் 35,720 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் அமெரிக்காவின் நன்கொடையாக வழங்கப்பட்ட மாடர்னா தடுப்பூசிகளின் முதல் டோஸ் நேற்றைய தினம் 69,830 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இர்ணடாவது டோஸ் 39 பேருக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.