கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியன டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அட்டவணைகளில் மாற்றங்களை ஏற்படுத்த கட்டாயப்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தேவைப்பட்டால் இதுபோன்ற எந்தவொரு திட்டத்தை ஆதரிப்போம் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது.

டோக்கியோவில் தற்போது தினசரி வெப்ப நிலை 33 டிகிரி செல்சியஸ் (91.4 ° F) ஆக பதிவாகியுள்ளது.

இந் நிலையில் அதிகமாக இருக்கும் வெப்ப நிலையில் போட்டியிடுவது தங்களது செயல்திறனைத் தடுத்து நிறுத்தியதாக பல விளையாட்டு வீரர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.

அது மாத்தரமன்றி அதிக ஈரப்பதமும் வீரர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையிலேயே மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானின் மிகவும் பிரபலமான வானிலை பயன்பாடுகளில் ஒன்றான யாகூ தென்கி, அதிக வெப்ப அழுத்தத்தின் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு திறப்பு விழாவின் என்.பி.சி.யின் ஒளிபரப்பு 16.7 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

NBCOlympics.com மற்றும் NBC Sports செயலி உட்பட அனைத்து தளங்களிலும், 17 மில்லியன் மக்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக் தொடக்க விழாவைப் பார்த்ததாக NBCUniversal ஒரு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.