-ஹரிகரன்-

அமெரிக்க நிறுவனம் திருகோணமலையை ஒரு எண்ணெய் கேந்திரமாக மாற்ற முனைவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2015இல் இலங்கைக்கு வந்திருந்த போது, இலங்கை அரசுடன் இணைந்து தெற்காசியாவின் எண்ணெய் கேந்திரமாக திருகோணமலையை மாற்றியமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்

திருகோணமலை துறைமுகம் அமெரிக்காவுக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக பரபரப்பான ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருந்தார் தேசப்பற்று தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி.வசந்த பண்டார. பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னணியில் தான், இந்த செய்தி வெளியிடப்பட்டது.

பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்குச் சென்று திரும்பிய பின்னர், அவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டமை, அமெரிக்கா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் இராஜதந்திரிகளுடன் அவர் நடத்திய சந்திப்புகள் எல்லாமே, பல்வேறு ஊகங்களைக் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கின்றன.

அதில் ஒன்று தான், பஷில் ராஜபக்ஷ மூலமாக பேச்சு நடத்தி, திருகோணமலை துறைமுகத்தை மூவாயிரம் மில்லியன் டொலர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற்றுக்கொள்ள, அமெரிக்க நிறுவனம் ஒன்று இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளது என்ற தகவல் ஆகும்.

மூவாயிரம் மில்லியன் டொலர்கள் என்பது மிகப்பெரிய தொகை. 3 பில்லியன் டொலர்கள் அல்லது கிட்டத்தட்ட இன்றைய நாணய மதிப்பில் சுமார், 60 ஆயிரம் கோடி வரை இருக்கும். கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் முதற்கட்டத்துக்காக, சீனா செலவிடும் 1.4 பில்லியன் டொலர்கள் தொகையிலும் இரண்டு மடங்கு இது.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது வெறும் 1.12 பில்லியன் டொலருக்குத் தான். இதிலிருந்தே, 3 பில்லியன் டொலர்கள் என்பது எந்தளவுக்கு பெறுமானம் கொண்டது என்பதை புரிந்து கொள்ளலாம். இவ்வளவு பெரியதொரு தொகையை வெறும் 5 ஆண்டு குத்தகைக்காக அமெரிக்க நிறுவனம் பெறுவது சாத்தியப்பாடான ஒன்றான என்பது முதற்கேள்வி.

திருகோணமலை துறைமுகம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களால், இந்தியப் பெருங்கடலில் அதிகாரம் செலுத்துவது சுலபம் என்பதிலும் சந்தேகம் இல்லை. திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றும் இராணுவ கேந்திரமாக குத்தகைக்கு பெற முயற்சிக்கவில்லை.

அதனை வணிகத் தேவைக்காக அணுகுவதாயின், 3 பில்லியன் டொலர்கள், 5 ஆண்டுகளுக்குள் ஈட்டிக் கொள்வதென்பது சாத்தியமேயில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-25#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
https://bookshelf.encl.lk/.