வடகடலில் பெருகும் அட்டைப்பண்ணைகள்: வாழ்வியல் மாற்றமா? வளப்பறிப்பா?

By Gayathri

25 Jul, 2021 | 03:46 PM
image

ஆர்.ராம்

கிளிநொச்சி, கௌதாரிமுனை, கல்முனையில் கடந்த மாத இறுதியில் இலங்கை, சீன கூட்டு நிறுவனத்தால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணை அடையாளம் காணப்பட்டது. 

குறித்த கடலட்டைப் பண்ணைக்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ள தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையானது, (நக்டா) கௌதாரிமுனையில் இயங்கும் சங்கத்துடன் அரியாலையில் உள்ள அட்டைக் குஞ்சுகளை விருத்தி செய்யும் பண்ணை உரிமையாளர்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் செயற்படுகின்றது என்றும் குறிப்பிடுகிறது. 

எனினும் இந்தப் பண்ணையின் செயற்பாடுகள் தற்போது வரையில் தொடர்கின்றன. 80பேர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த பண்ணையை தொடந்து செயற்படுவதற்கு அனுமதிப்பதாக விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அதேநேரம், கடா பிடாரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையில் இந்தப் பண்ணையை அகற்றுமாறு பிரதேச வாசிகள் வலியுறுத்துகின்றனர். அதற்கான எழுத்துமூல கோரிக்கையை அமைச்சரிடம் கையளித்துள்ளதாகவும் கூறுகின்றனர். 

மறுபக்கத்தில் குறித்த பண்ணையை நேரில் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், கஜேந்திரன் போன்றவர்கள் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகி வருவதாக கூறுகின்றனர். 

அரியாலை கடலட்டைப் பண்ணையிலிருந்து அட்டைக்குஞ்சுகளை கடந்த ஜுன் மாதம் 10ஆம் திகதி கொளதாரிமுனை, கல்முனையில் அமைக்கப்பட்ட பண்ணையில் விட்டதாகவும் அப்பகுதியில் இயங்கும் சங்கத்தின் தலைவரின் பிரசன்னத்துடனே பண்ணைக்கான எல்லை நிர்ணயிக்கப்பட்டதாகவும் குறித்த பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

அரியாலை துறைமுகத்திற்கு அருகாமையில், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் ‘குயிலன்’ தனியார் நிறுவனத்திற்கு 899.9 சதுர மீட்டரில் சுமார் 70,000 அட்டைக் குஞ்சுகளை விருத்தி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியானது, 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் அமைத்திருந்த அப்போதைய அரசாங்கத்திடம் சீன நிறுவனம், பெற்றுக்கொண்டு குஞ்சு இனப்பெருக்க நிலையம் ஒன்றினை ஆரம்பித்ததாக கடற்றொழில் அமைச்சரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் குறித்த குயிலன் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்களாக இலங்கையை சேர்ந்த எச்.எம்.தம்மிக்க டி.சில்வா, சீனாவை சேர்ந்த ஷிச்சா ஓ லீ மற்றும் யு.ஆன்ச்சன் ஆகியோர் காணப்படுகின்றார்கள். 

இந்த நிறுவனமானது தனக்கு அனுமதிக்கப்பட்ட பகுதியில் நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக மேற்கொண்ட ‘செயற்கை முறை’ இனப்பெருக்கச் செயற்பாட்டால் கடலட்டை குஞ்சுகளின் அளவானது பண்ணையின் கொள்ளளவைத் தாண்டிவிட்டது. 

இதன்காரணமாகவே, குறித்த பண்ணையின் முகாமை, கௌதாரிமுனைப் பகுதி கடற்றொழிலாளர்கள் சங்கத்தினை தொடர்பு கொண்டு மேலதிக அட்டைக்குஞ்சுகளை வளர்ப்பதற்கான அனுமதியைக் கோரியிருக்கின்றது. அதனடிப்படையில் தான் கௌதாரிமுனையில் பண்ணை அமைக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-07-25#page-20

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right