தென்னிந்திய நடிகையும், விஜய் டி.வி.யின் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

யாஷிகா ஆனந்த் பயணித்த கார் இன்று அதிகாலை ஒரு மணியளவில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்ததுடன், அவரது தோழி தோழி, வள்ளிச்செட்டி பவணி (வயது 28) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் இரண்டு நண்பர்கள் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.